Madurai Areas

This part describes the areas and locations of madurai. Also describes the geographical locations, climates, and maps of the madurai.

நகரின் அமைப்பு
Thursday 11, Jul 2019

நகரின் வாழ்க்கை 2500 வருட சரித்திரச்சின்னங்களோடு உரசிக் கொண்டு இயங்கி

வருகிறது. நகரின் நடு நாயகமாக மீனாட்சி அம்மன் கோவில். பாண்டிய மன்னர்களும்,

தொடர்ந்து நாயக்க மன்னர்களும் கோவில் திருப்பணிகளை தாராளமாக செய்து

வந்ததால் கோவில் பல மடங்கு விரிவடைந்து நான்கு புறமும் ஆடி வீதிகளை

உள்ளடக்கி நிற்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் கட்டத்துவங்கிய ராஜகோபுரம்

கோவிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகளையும், அதையடுத்த ஆவணி மூல

வீதிகளையும் தாண்டி நிற்கிறது. இந்த வேலை நிறைவு பெற்றிருந்தால் இந்த

வீதிகளும் கோவிலுக்குள் அடங்கி நின்றிருக்கும்.கோவிலைச் சுற்றி சதுரம் சதுரமாக

விரிவடைந்து கொண்டே வரும் வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் தான்.

கோவிலுக்குள் ஆடி, கோவிலுக்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என மூன்று

சதுர வீதிகளுக்குப் பின் 'வெளி வீதி'கள். இவையனைத்தும் நகரின் மையப்பகுதியான

பின்கோட் எண் 625001ல் அடங்கிய பகுதிகள் மட்டுமே. ஆனால் சரித்திரச் சின்னங்கள்

நகரின் தற்போதைய எல்லையைத் தாண்டியும் பரவலாக உள்ளன

 

More Areas links
First        1          Last