Madurai News

உலக பாட்மின்டன் சாம்பியன் வென்ற மதுரை மாணவி
Wednesday 02, Oct 2019

மாற்றுத்திறனாளிகளுக்கான

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்

போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற

மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு

பாராட்டு விழா நடத்தப்பட்டது.


 

 


சீனாவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில்

மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி

ஜெர்லின் அனிகா தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

அப்பள்ளியில் மாணவிக்கு பாராட்டு விழா வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

சார்பில் நடத்தப்பட்டது.



 

தலைமை ஆசிரியை பூங்காவனம் தலைமை வகித்தார். விளையாட்டு ஆசிரியர்

ஜெயபிரகாஷ் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், ஆசிரியர்கள்

பதக்கம், நற்சான்று வழங்கினார். ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள்

கண்ணன், அசோக்குமார் செய்திருந்தனர்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last