Madurai News

வைகையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
Saturday 27, Jul 2019

வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து

 

வருவதால் மதுரை மாநகராட்சிக்கு

 

 

திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு

 

 

48 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



 

 

 

 

 

 

 

அணையிலிருந்து மதுரை நகர், தேனி, ஆண்டிப்பட்டி குடிநீர் தேவைக்காக தினமும் வினாடிக்கு

 

60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

 

இதன் மூலம் மாநகராட்சிக்கு தினமும் 115 எம்.எல்.டி., குடிநீர் கிடைத்தது. தென்மேற்கு

 

பருவமழை துவங்காததால் நீர்வரத்து முற்றிலும் நின்று அணை வறண்டது.



20 அடி வரை மண் மேவியுள்ள அணையில் நீர்மட்டம் 27 அடியாக சரிந்தது. ஏழு அடி வரை

 

மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும் என்பதால் மதுரைக்கு திறக்கப்பட்ட தண்ணீர் அளவு

 

வினாடிக்கு 28 கனஅடியாக குறைக்கப்பட்டது. தினமும் கிடைத்த குடிநீர் அளவு 81

 

எம்.எல்.டி.,யாக சரிந்தது. இதனால் மதுரையில் குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை

 

விநியோகிக்கப்பட்டது.



மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர். ஆங்காங்கு போராட்டங்கள் நடந்தன.

 

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓரளவு மழை பெய்ய துவங்கி முல்லைப்

 

பெரியாறுக்கு கூடுதல் நீர்வரத்து இருந்ததால் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

 

அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. அணை நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்து நேற்று 29.13

 

அடியாக இருந்தது.



 

 

அணைக்கு வினாடிக்கு 153 கனஅடி வீதம் நீர் வரத்து உள்ளது. இதனால் மதுரை நகர்

 

குடிநீருக்கான அளவு வினாடிக்கு 48 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் 115 எம்.எல்.டி.,

 

குடிநீர் கிடைக்கிறது.



மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வைகை அணை வறண்டதால்

 

எதிர்கால தேவை கருதி அங்கிருந்து எடுக்கும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டது. ஆனால் குடிநீர்

 

தட்டுப்பாடு குறித்த புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது மழை கை கொடுத்ததால்

 

வழக்கமான தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான

 

குடிநீர் வழங்கப்படும் என்றனர்.

 

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last