Madurai Jobs

கப்பல் படையில் அப்சர்வர் அதிகாரி பணி அறிவிப்பு
Friday 23, Apr 2010

இந்தியக் கப்பல் படையின் எக்சிக்யூட்டிவ் பிரிவில் சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் அப்சர்வர் அதிகாரி பணிக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஜனவரி 2011ல் கேரளாவில் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் நடத்தப்படும்.
கல்வித்தகுதி
ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதத்தைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
வயது
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 19 வயது நிரம்பியவராகவும் 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.01.1988லிருந்து 01.01.1992க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
உடற் தகுதி
ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ., உயரமும், பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ., உயரமும் பெற்றிருக்க வேண்டும். இந்த உயரத்துக்கு இணையான எடை, கால்களின் நீளம், உட்கார்ந்த நிலையில் உயரம் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதும் சில நிபந்தனைகள் உள்ளன. நிறக் கோளாறு மற்றும் மாலைக் கண் நோய் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்ச்சி முறை
இந்தப் பதவிக்கு அதிகபட்ச கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக் கான அழைப்பு அனுப்பப்படும். நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் நேர்காணல் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பருக்குள் பெங்களூருவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி எப்படி இருக்கும்
இந்தப் பதவிக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் கேரளாவில் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் நடைபெற உள்ளது. தேர்ந்த்தெடுக்கப்படுபவர்கள் சப்-லெப்டினன்ட் அளவிலான அதிகாரியாக இந்தியாவிலுள்ள பல்வேறு கப்பல் பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். வெற்றிகரமான பயிற்சியின் முடிவில் சப்-லெப்டினன்ட் பதவி வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது
விண்ணப்பத்தைப் பரிந்துரைக்கப் பட்ட மாதிரியில் மட்டுமே தயார் செய்து விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்துடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட 10 ஆம் வகுப்புச் சான்றிதழின் நகலையும் இதரக் கல்வித்தகுதிக்கான சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். இதன் பின் விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது 'APPLICATION FOR SSC (OBSERVER) & JAN 2011 COURSE, Qualification Percentage % Gender '  என்று மறக்காமல் குறிப்பிட வேண்டும். சாதாரணத் தபாலின் மூலம் மட்டுமே அனுப்பவேண்டிய விண்ணப்பங்கள் சென்றடையக் கடைசி நாள் : 07.05.1010.
முகவரி
POST BAG NO : 5, G.P.O., NEW DELHI 110 001.

More Jobs links
First        1          Last