Madurai Apartments

சவுத் இந்தியன் வங்கியில் கிளரிகல் பதவி
Tuesday 13, Dec 2011

இந்தியாவில் இயங்கும் தனியார் துறை வங்கிகளில் பழமை வாய்ந்ததும், சிறந்த சேவைகளுக்குப் பெயர் பெற்றதில் சவுத் இந்தியன் வங்கி லிமிடெட்டிற்கு முக்கிய இடமுண்டு. இந்த வங்கி விடுதலைப் போராட்ட காலத்தின் சுதேசி இயக்கத்தின் போது நிறுவப்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இந்த வங்கி இயங்கி வந்தாலும், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த வங்கியில் புரொபேஷனரி கிளரிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைஎன்ன: சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 30.09.2011 அன்று 20 முதல் 26க்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை இவர்கள் முடித்திருக்க வேண்டும்.
அறிவியல் புலம் வாயிலாக பட்டப் படிப்பை முடித்தவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும், இதர புலங்களில் படித்தவர்கள் குறைந்த பட்சம் 45 சதவிகித மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டரில் பணி புரியும் திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட கேரளாவின் இதர மையங்களில் எழுதலாம்.
இதர தகவல்கள்: சவுத் இந்தியன் வங்கியின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐ சலான் மூலமாக ஏதாவது ஒரு சவுத் இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் இந்த சலான் விபரங்களுடன் ஆன்-லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கு உபயோகத்தில் உள்ள ஒரு தனி இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட், சான்றிதழ் நகல்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய அனைத்தையும் இணைத்து பின் வரும் முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the post of pro.clerks & Kerala and Tamilnadu – Application ref ID & …… (please fill in) ……...'' என்று குறிப்பிட வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
Asst.General Manager (Personnel),
The South Indian Bank Ltd.,
Head Office, SIB House,
Mission Quarters,
Thrissur 680 001,Kerala
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 24.12.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 31.12.2011
இணையதள முகவரி : www.southindianbank.com/

More Apartments links
First        1          Last