Madurai Jobs

இன்போசிஸ் நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்புகள்
Friday 23, Apr 2010

இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனம் சாப்ட்வேர் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம் என்பது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தில் பணி புரியும் 7 ஆயிரத்து 500 கீழ் நிலை மற்றும் நடு நிலை ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வெளி நாட்டுக் கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 13 முதல் 17 சதவிகித ஊதிய உயர்வையும், இந்தியாவில் பணி புரிபவர்களுக்கு 2 முதல் 3 சதவிகித ஊதிய உயர்வையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனம் புதிதாக 30 ஆயிரம் பேரைப் பணி நியமனம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றில் 19 ஆயிரம் பணியிடங்கள் கேம்பஸ் முறையிலும், 5 ஆயிரத்து ஐநூறு பணியிடங்கள் லேடரல் முறையிலும், சீனா, மணிலா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களிலிருந்து 2 ஆயிரம் பேரும், மிச்சமுள்ள இடங்கள் பி.பி.ஓ, பணிகளுக்கும் நிரப்பப்படவுள்ளதாக இந்த நிறுவனத்தின் செய்தி தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 18 ஆயிரம் பேரைப் பணி நியமனம் செய்யப் போவதாக அறிவித்த இதே நிறுவனம் இறுதியில் 27 ஆயிரம் பேருக்குப் பணி நியமனங்களை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்கெனவே 300 இடங்களில் கேம்பஸ் முறைக்கு சென்றுவிட்டது.
இன்போசிஸ் நிறுவனத்தில் சென்ற நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் அட்ரிஷன் விகிதம் அதிகமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கு பணி துண்டிக்கப்பட்டது.
ஐ-ரேஸ் என்ற இன்போசிஸ் நிறுவனத்தின் பி.பி.ஓ., நிறுவனத்தில் எச்.ஆர் பாலிசியில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகவே இந்த அளவு அட்ரிஷன் அதிகரித்ததாகவும், இதனைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனத்தில் பணி புரிபவர்களின் ஊதியங்கள் உயர்த்தப்பட உள்ளதாகவும் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

More Jobs links
First        1          Last