இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கியான சிண்டிகேட் வங்கியில் 1000 கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் 80 காலியிடங்கள் உள்ளன. இந்திய அரசின் கட்டுப் பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கான பணி இடங்களுக்கு இந்திய அரசியல் சட்ட மாதிரியின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது
சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி கிளரிகல் பணிக்கு விண்ணப்பிக்க 01.03.2010 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 5 ஆண்டுகளும், விதவை, விவாகரத்து ஆன பெண்களுக்கு 9 ஆண்டுகளும் உச்ச பட்ச வயதில் வயதுச் சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கும் இப்பணிகளில் உச்ச பட்ச வயதில் 3 ஆண்டுகள் சலுகை உள்ளது.
இது குறித்த முழு விபரங்கள் அறிய இவ்வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். முகவரி : 'www.syndicatebank.in'
கல்வித் தகுதி
01.03.2010க்குள் பிளஸ் டூ அளவிலான படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. பட்டப் படிப்பு முடித்தவர்\களும் விண்ணப்பிக்கலாம். இவற்றுடன் கம்ப்யூட்டருடன் தொடர்புடைய திறமையும் கூடுதலாகத் தேவைப்படும். ஆங்கில மொழித்திறனும், விண்ணப்பிக்கும் மாநில மொழியில் ஆளுமையும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை
புரோபேஷனரி கிளரிகல் பிரிவுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 105 நிமிட நேரத்தில் எழுதும் எழுத்துத் தேர்வு 200 கேள்விகளைக் கொண்ட அப்ஜக்டிவ் வகையைச் சேர்ந்தது. இத் தேர்வில் ரீசனிங், நியூமரிகல் எபிலிட்டி, கம்ப்யூட்டர் அறிவு மற்றும் ஆங்கில அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் இருக்கும். இத் தேர்வை இந்தி மொழி வாயிலாகவும் எழுதலாம். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வை தமிழகத்தில் சென்னையிலும் கோவையிலும், நமது அருகிலுள்ள மாநிலங்களின் மையங்களான மங்களூரு, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் எழுதலாம்.
விண்ணப்பக் கட்டணம்
இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.200/- கட்டணமாக நிர்ணயிக்கப்படுள்ளது. இக்கட்டணத்தை வங்கியின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி சலானின் மூலம் ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும், வேறு எந்த முறையிலும் கட்டணம் செலுத்தக்கூடாது. எஸ்.சி., எஸ்.டி., ஊனமுற்றோருக்கு கட்டணம் ரூ.50/- மட்டுமே. கட்டணத்தை 13.04.2010 முதல் 12.05.2010க்குள் செலுத்தி விட வேண்டும். கட்டணத்தை CBS ACCOUNT NO:01111150000 439 என்ற அக்கவுண்ட் எண்ணில்
'SYNDICATE BANK PROBATIONARY CLERKS' RECRUITMENT PROJECT & 2010&11' என்ற பெயரில் கட்டவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
முதலில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும். சிண்டிகேட் வங்கியில் கட்டணம் செலுத்திய பின் வங்கியின் இணைய தளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் இதற்கு முன் உங்களுக்கு நடப்பில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி இருப்பதை உறுதி செய்யவும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும் அனைத்து விபரங்களையும் தவறாமல் முழுமையாக குறிப்பிட வேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்திய சலானின் ஒரிஜினலை எழுத்துத் தேர்வு நடைபெறும் பொது எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின் எந்த படிவத்தையும் அனுப்ப வேண்டியது இல்லை. அனைத்து சான்றுகளும் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலின் போது மட்டுமே தேவை. எழுத்துத் தேர்வுக்கான அழைப்புகள் 22.06.2010க்குள் சாதாரணத் தபாலில் அனுப்பப்பட்டுவிடும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சில முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பிக்கும் நாள் : 13.04.2010
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 12.05.2010
எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் : 27.06.2010
இணையதள முகவரி : www.syndicatebank.in