வாடிப்பட்டி: சமயநல்லூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், அவசர தேவைக்கு ஜெர்மன் தொழில் நுட்பத்தில் சூரிய ஒளியில் இயங்கும் "அவசர கால
தானியங்கி போன் சேவை' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை, ஐந்து கிலோ மீட்டர் இடைவெளியில்அமைக்கப்பட்டுள்ளன.அவசர கால தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, ஜெர்மன் நாட்டில் முதல்முறையாக "ஸ்மோர் கோடு சிஸ்டம்' (அவசர கால சேவை பரிமாற்றம்) 1901ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடலில் செல்லும் கப்பல் குறித்து தகவல் கிடைக்காதபோது, எஸ்.ஓ.எஸ்., ("சேவ் அவர் சோல்' - "உயிரை பாதுகாப்பீர்') என்ற "சமிக்ஞை' சொல் பயன்படுத்தப்பட்டது. இதன்படி, துறைமுகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் பரிமாற்றம் செய்யும் இயந்திரத்தில் "எஸ்... --- ... ஓ .... --- .... எஸ் ... --- ...' என பதிவு செய்வர்.இத்தகவல் கடலில் எங்கோ ஒரு இடத்தில் தகவல் இன்றி இருக்கும் கப்பலுக்கு சென்றடையும். இதன் மூலம் அந்தக்கப்பல் எந்த திசையில் இருக்கிறது என்பதை கண்டறிந்து தேடும் படலம் துவக்கப்படும். இதே தொழில்நுட்பம் விமான போக்குவரத்திலும் பயன்படுத்தப்பட்டது. இத்திட்டம் தகவல் தொழில்நுட்பத்தில் அப்போது புரட்சியை ஏற்படுத்தியது. இதனால், இத்தொழில்நுட்பத்தை 1905ல் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதில் தற்போது பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு சேட்டிலைட்டுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. கப்பல், விமானத்தை அடுத்து எஸ்.ஓ.எஸ்., தொழில்நுட்பம் தரைவழி போக்குவரத்திலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நான்கு வழிச்சாலையில் எஸ்.ஓ.எஸ்., போன் வசதி சூரிய ஒளியில் (அவசர கால தானியங்கி போன் சேவை) இயக்கப்படுகிறது. ஐந்து கி.மீ., தொலைவு இடைவெளியில் இச்சேவை அமைக்கப்பட்டுள் ளது. நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்து மற்றும் பிற அவசர தேவைக்காக, இங்குள்ள எஸ்.ஓ.எஸ்., போனின் முதல் சுவிட்சை அழுத்த வேண்டும். சிறிது நேரம் காத்திருப்பிற்கு பின் பதில் வரும். அதில் தேவையான தகவல்களை எந்த மொழியிலும் தெரிவிக்கலாம்.எஸ்.ஓ.எஸ்., போன் கருவிகளுக்கு எண்கள் வழங்கப் பட்டுள்ளன. எஸ்.ஓ.எஸ்., போனில் இருந்து பெறப்படும் தகவல்கள் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படும். இதன்படி, எந்த போனில் இருந்து தகவல் வருகிறது என்பதை கணக்கிட்டு உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் நடக்கிறது. அவசர தேவைக்கு இலவச 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்தால், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அங்கிருந்து பெறப்படும் உத்தரவுப்படி தான் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதுபோலவே, எஸ்.ஓ.எஸ்., போனில் பெறப்படும் தகவலுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் அல்லது ஆம்புலன்ஸ் வசதி உடனுக்குடன் பெற முடியும்.