Madurai News

தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
Friday 30, Jul 2010

திருப்பரங்குன்றம்: பி.எஸ்சி., முடித்தவர்களுக்கு மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 31, ஆக., 1ல் நடக்கிறது.விப்ரோ நிறுவனத்தில் பணியாற்ற, 2010ல் பி.எஸ்சி., கணிதம், இயற் பியல், வேதியியல், கம்ப் யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணிமுதல் நடக்கிறது. எஸ்.எஸ். எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 50 சதவிதம், பி.எஸ்சி., யில் 60 சதவித மதிப்பெண்கள் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வானவர்களுக்கு எழுத்து தேர்வும், நேர்முகத் தேர்வும் நடக்கும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், பிலானியில் உள்ள "பிட்ஸ்' கல்லூரியில் சம்பளத்துடன் எம்.எஸ்., படிப்பு முடித்ததும், விப்ரோ நிறுனத்தில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவர். தகுதி உடையவர்கள் சான்றிதழ்களுடன் நாளை திருப்பரங்குன்றம் தியாகராஜர் இன்ஜி., கல்லூரிக்கு வரலாம், என வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஷ் தெரிவித்தார்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last