Madurai News

கைப்பந்து போட்டி - அண்ணா பல்கலை.க்கு கோப்பை வசமானது
Tuesday 17, Apr 2018

நாகமலை புதுக்கோட்டை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை காமராஜ் பல்கலை சார்பில் பல்கலைகளுக்கான மாநில ஹேண்ட்பால் போட்டிகள் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தன.

ஆண்களுக்கான இறுதி போட்டியில் அண்ணா பல்கலை, மதுரை காமராஜ் பல்கலை அணிகள் மோதின. இதில் 37:36 என்ற கோல் அடிப்படையில் அண்ணா பல்கலை வென்றது. மதுரை காமராஜ் பல்கலை இரண்டாவது இடம் பிடித்தது. கோவை கற்பகம் பல்கலை அணி 23:22 என்ற கோல் அடிப்படையில் அண்ணாமலை பல்கலையை வென்று மூன்றாவது இடம் பிடித்தது.பெண்களுக்கான இறுதி போட்டியில் திருவள்ளுவர் பல்கலை, மதுரை காமராஜ் பல்கலை அணிகள் மோதின. திருவள்ளுவர் பல்கலை அணி 12:8 என்ற கோல் அடிப்படையில் வென்றது. மதுரை காமராஜ் பல்கலை இரண்டாவது இடம் பிடித்தது. சென்னை பல்கலை அணி 14:4 கோல் அடிப்படையில் கோவை கற்பகம் பல்கலை அணியை வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் குமார் வரவேற்றார். முதல்வர் ராமமூர்த்தி பரிசுகளை வழங்கினார். மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குனர் ஜெயவீரபாண்டியன் நன்றி கூறினார்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last