Madurai News

"அமெரிக்கா வெள்ளை மளிகை" மதுரை கலெக்டர் அலுவலகம் :அமைச்சர் உதயகுமார்
Tuesday 17, Apr 2018

 ''அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை போல் 27 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மதுரை கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம் ஜொலிக்கும்,'' என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் பழமையான கட்டத்தில் இயங்கும் கலெக்டர் அலுவலகம் 27 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகமாக மாற்றப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஏப்.,15) நடக்கிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னவீர்செல்வம் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயகுமார் நேற்று பார்வையிட்டார்.

அவர் கூறியதாவது: புதிய கட்டடம் கட்ட 2017 அக்.,30ல் அரசாணை பிறப்பிக்கப்

பட்டது. 2011 - 17 வரை தமிழகத்தில் வி.ஏ.ஓ., முதல் கலெக்டர் அலுவலகம் வரை 550 கோடி ரூபாய் மதிப்பில் 549 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மதுரை கலெக்டர்

அலுவலக புதிய கட்டடம் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டடம் போல் திகழும். ஒரு லட்சத்து 17 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம் உட்பட ஐந்து தளங்கள் கட்டப்படும். 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இது அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை போல் ஜொலிக்கும், என்றார்.

கலெக்டர் வீரராகவராவ், டி.ஆர்.ஓ., குணாளன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last