Madurai News

நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் வசூல்
Monday 16, Apr 2018

:மதுரை அரசு மருத்துவமனை எலும்பு முறிவு, விபத்து காய சிகிச்சை பிரிவில்

 

ஊழியர்கள் வசூலில் ஈடுபடுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கும் இப்பிரிவில் உள்நோயாளிகள் 250 பேர், விபத்து, அடிதடி காயங்களுடன் தினமும் 50 பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களின் உயிர் காக்கும் உன்னத பணியில் ஊழியர்கள் ஈடுபட வேண்டும்.


ஆனால் அதை மறந்து ஊழியர்கள் சிலர் பலத்த காயங்களுடன் வரும் நோயாளிகளிடம் பணம் வசூலிக்கின்றனர். பணம் தரும் நோயாளிகளை மட்டுமே கவனிக்கின்றனர். மேலும் இங்கு முதுநிலை மருத்துவ மாணவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர்.


அனுபவம் வாய்ந்த எலும்பு முறிவு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வருவதில்லை. ஒரு ஷிப்டில் 5 நர்ஸ்களுக்கு 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். டாக்டர், நர்ஸ்கள் பற்றாக்குறையுடன் ஊழியர்களின் பண வசூலால் நோயாளிகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து டீன் மருதுபாண்டியன் நடவடிக்கை எடுக்கவும் நோயாளிகள் வலியுறுத்தினர்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last