உறவினர்களை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொல்ல முயற்சிப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.27 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, தங்களது உறவினர்களை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொல்ல முயற்சிப்பதாக கூறி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஈஸ்வரி (65), காந்திமதி (43), ஆறுமுகத்தாய் (40), ஆறுலட்சுமி (60), லட்சுமி (40) ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். இவர்கள் 5 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.