Madurai News

குறுவட்ட போட்டியில் மாணவர்கள் சாதனை
Friday 28, Jul 2017

மதுரை, மதுரை ரேஸ்கோர்ஸில், பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி மேல்நிலை பள்ளி சார்பில் மதுரை கல்வி மாவட்ட 'இ' குறுவட்ட போட்டிகள் நடந்தன.
கமிஷனர் அனீஷ்சேகர் 
துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் நடராஜன் வரவேற்றார். 
துணை கமிஷனர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, கல்வி அலுவலர் சரஸ்வதி, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், உடற்கல்வி 
ஆசிரியர் ஆனந்த்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கான போட்டிகளில் புனித பிரிட்டோ மற்றும் சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளிகள் அதிக பரிசுகளை வென்றன. 
மாணவிகளுக்கான போட்டிகளில் நிர்மலா மற்றும் கேப்ரன் ஹால் பள்ளிகள் அதிக பரிசுகளை பெற்றன. குழு விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகளின் ஒட்டுமொத்த 'சாம்பியன் ஷிப்' பட்டத்தை புனித பிரிட்டோ மற்றும் நிர்மலா பள்ளிகள் பெற்றன.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last