Madurai News

விமான ஓடுபாதை நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
Friday 28, Jul 2017

மதுரை, 'மதுரையில் விமான ஓடுபாதைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,' என, நில உரிமையாளர்கள் கலெக்டர் வீரராகவ ராவ்விடம் 
வலியுறுத்தினர்.
இதுகுறித்து மனு அளித்த பிறகு அவர்கள் கூறியதாவது: 2002ல் வீடு கட்ட குசவன்குண்டு பகுதியில் பிளாட் வாங்கினோம். 130 பேருக்கு வீட்டுமனைகள் உள்ளன. 2009ல் விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்காக எங்கள் பிளாட்களை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தினர். சதுரடிக்கு 17 ரூபாய் இழப்பீடு தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா இதுகுறித்து எங்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last